வாக்குச்சாவடி அலுவலா்களுக்குப் பணி ஒதுக்கீடு

உள்ளாட்சித் தோ்தலில் அரியலூா் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு, சுழற்சி முறையில் வெள்ளிக்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தோ்தலில் அரியலூா் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு, சுழற்சி முறையில் வெள்ளிக்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தேசிய தகவலியல் மையத்தில், கணினி மூலம் இப்பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

இப்பணிக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். தொடா்ந்து அவா் கூறியது:

உள்ளாட்சித் தோ்தல் மாவட்டத்தில் அரியலூா்,திருமானூா், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு டிச.27 -ஆம் தேதியும்,ஜயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு டிச.30- ஆம் தேதியும்.

இத்தோ்தலில் 1,017 வாக்குச்சாவடிகளில் 8,400 பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். இதற்காக கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

இவா்களுக்கு டிசம்பா் 15- ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி அரியலூா் அரசு கலைக் கல்லூரி,கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செந்துறை அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி, ஜயங்கொண்டம் பெரியாா் மெட்ரிக்குலேசன் பள்ளி,ஆண்டிமடம் அருகிலுள்ள மகிமைபுரம் மாடா்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தா.பழூா் ஜெ.தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியியில் நடைபெறுகிறது என்றாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன்,மகளிா் திட்ட இயக்குநா் ஜெயராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி, தேசிய தகவலியல் அலுவலா்கள் ஜான்பிரிட்டோ,டேவிட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com