Enable Javscript for better performance
காடுவெட்டி குரு பிறந்தநாள்: 11 நாள்களுக்கு  144 தடை உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    காடுவெட்டி குரு பிறந்தநாள்: 11 நாள்களுக்கு  144 தடை உத்தரவு

    By DIN  |   Published on : 01st February 2019 03:22 AM  |   அ+அ அ-   |    |  


    மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை (பிப்.1)  கொண்டாடப்பட உள்ள நிலையில்  அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு 11 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ. குரு(எ) குருநாதன்.  வன்னியர் சங்க மாநிலத் தலைவராக இருந்த இவர்  அண்மையில்  காலமானார்.
    இந்நிலையில் வெள்ளிக்கிழமை (பிப்.1) அவரது சொந்த கிராமமான காடுவெட்டியில் கொண்டாடப்படும் இவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
    விழாவில்,நாகை மாவட்டம் வழுவூரைச் சேர்ந்த முன்னாள் பாமக மாநில பொறுப்பாளர் வி.ஜி.கே. மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில், ஜன.31 முதல் பிப்.10 வரை காடுவெட்டி, மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவை  அமல்படுத்தி உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி  உத்தரவிட்டார்.வி.ஜி.கே. மணிகண்டன் ஜெ. குருவின் மகனை பாமகவுக்கு எதிராக வழிநடத்தியதாலும், ஜெ. குருவின் படத்திறப்பு விழாவை தனியாக நடத்தியதாலும், பாமகவிலிருந்து  அண்மையில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp