கள்ள சாராய தீமைகள் விழிப்புணர்வு பிரசாரம்

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு சார்பில் கள்ள சாராயத்தால் ஏற்படும் தீமைகள்


அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு சார்பில் கள்ள சாராயத்தால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் வசந்த்,ஸ்ரீதர்,மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, கள்ள சாராயம் காய்ச்சி தற்போது திருந்தி வாழ்பவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் வழங்கப்படும். 
சாலை விதிமுறைகளை மதித்து,சரியான இடத்தில் சாலையை கடக்க வேண்டும். மது அருந்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும். தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும், காரில் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.  இது போன்ற விதிமுறைகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து பெரம்பலூர் ஓசை கலைகுழுவினர் கலைநிகழ்ச்சி, கரகாட்டம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com