சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியப் பகுதிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட அயன்ஆத்தூர், சன்னாசிநல்லூர், மணக்குடையான்,மணப்பதூர்,குழுமூர்  கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து,  பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
  முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு வழங்கும் உதவித் தொகைகள், நலத்திட்டங்கள் சரிவர கிடைப்பதில்லை. குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை என பொதுமக்கள் மனுக்கள் மூலமாகத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai