சுடச்சுட

  

  இந்திய மருத்துவர்கள் அமைப்பின் அரியலூர் பிரிவுத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு அமைப்பின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஆர். அருண்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் கே.ஆர்.  செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
  மாநிலப் பொதுச் செயலர் எம்.ஞானசுந்தரம் கூட்டத்தில்  பங்கேற்று, அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.
  முதுநிலைத் துணைத் தலைவர் மருத்துவர் ஏ.சி.மீனாட்சிசுந்தரம் மற்றும் தமிழ்நாடு கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில்  பேசினர். 
  முன்னதாக, பொருளாளர் கே.ஜெரோம்ஸ்டான்லி வரவேற்றார்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai