சுடச்சுட

  

  தேளூர் துணை மின்நிலையத்தில் சிறப்பு பராமரிப்புப் பணிகள்
  அரியலூர், பிப்.12: அரியலூர் கோட்டம், உபகோட்டத்திற்குட்பட்ட தேளுர் துணைமின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண்.1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.13) முதல் 3 நாள்களுக்கு நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் வாழைக்குழி, சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், ஓரியூர், ஓட்டக்கோவில் பகுதிகள்,கீழப்பழூர் துணை மின்நிலைய, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மின்பாதைக்கும்,
  விளாங்குடி மின்பாதையில் உள்ள நாச்சியார்பேட்டை, மணகெதி, ஆதிச்சனூர் ஆகிய பகுதிகள் உடையார்பாளையம் துணைமின் நிலைய .த.மேலூர் மின்பாதைக்கும்,  தேளுர் மின்பாதையில் உள்ள தேளுர் மற்றும் குடிசல் பகுதிகளுக்கு அரியலூர் துணை மின் நிலையம் அஸ்தினாபுரம் மின்பாதைக்கும் மாற்றப்படவுள்ளது. அதுசமயம் இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாற்றம் ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உதவி செயற்பொறியாளர் பி. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai