9 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம்
By DIN | Published on : 13th February 2019 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட துளார், அசவீரான்குடிக்காடு, தளவாய், ஆதனக்குறிச்சி,ஆலத்தியூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் திமுக ஆட்சி வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
இதேபோல ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆமணக்கன்தோண்டி, பெரியவளையம், கழுவன்தோண்டி,தேவமங்கலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் மணிமாறன் தலைமை வகித்து பேசினார்.