உடையார்பாளையம் பெரியநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்திலுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்திலுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டத்தை அடுத்த உடையார்பாளையத்தில் பாலவிநாயகர், பாலமுருகன், பாவாடைராயன், பைரவி ஆகிய  சக்தி பரிவாரங்களோடு கூடிய பெரியநாயகி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம்  தொடங்கியது. தொடர்ந்து தனபூஜை, லட்சுமி பூஜை, வாஸ்துசாந்தி, யாகசால பூஜைகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிவாச்சாரியார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் வேத மந்திரம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோயில் விமான கலசத்துக்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடத்தினர்.
இதில் பல்வேறு மாவட்ட மக்களும், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளையும் உடையார்பாளையத்தை சேர்ந்த மகாலெட்சுமி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சோமசுந்தரம், குப்புசாமி குடும்பத்தினர் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com