சுடச்சுட

  

  ஆண்டிமடம் சார் பதிவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

  By DIN  |   Published on : 19th February 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சார்பதிவகத்தில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.05 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
  ஆண்டிமடம் சார்பதிவகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றுக்கு அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து,  அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போஸீஸார் திங்கள்கிழமை இரவு அங்கு சோதனை நடத்தினர். இங்கு சார்பதிவாளராகப் பணியாற்றும் சுமதி அறையில் சோதனையிட்ட போது, கணக்கில் வராத ரூ.1.05லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai