முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
தேசிய போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ஊக்க தொகை
By DIN | Published On : 28th February 2019 11:10 AM | Last Updated : 28th February 2019 11:10 AM | அ+அ அ- |

கடந்த 2017-2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை அண்மையில் வழங்கப்பட்டது.
அரியலூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்து, தேசிய அளவிலான பளுதூக்கும் விளையாட்டில் பதக்கம் வென்ற பி. மாருஷ்,கே. காயத்திரி, கையுந்துபந்து விளையாட்டில் பதக்கம் வென்ற ஆர். செண்பகம் ஆகியோர்களுக்கு தலா ரூ.10,000-மும், பூப்பந்துப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ப. தருண்குமாருக்கு ரூ.4000-மும் என காசோலையாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் வெ.ஜெயக்குமார் ராஜா மற்றும் பயிற்றுநர்கள் ஆர்.சதீஷ்குமார், ஆர். ஹரிகரன் ஆகியோர் உடனிருந்தனர்.