தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் வீரர் குடும்பத்துக்கு நடிகர் விவேக் ஆறுதல்
By DIN | Published On : 28th February 2019 11:10 AM | Last Updated : 28th February 2019 11:10 AM | அ+அ அ- |

ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த அரியலூரைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் படை வீரர் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு நடிகர் விவேக் புதன்கிழமை ஆறுதல் கூறினார்.
அவரது குடும்பத்தினரை புதன்கிழமை நேரில் சந்திக்க கார்குடி கிராமத்துக்கு அவர் வந்தபோது சிவசந்திரனின் மனைவி சென்னைக்கு சென்று விட்டதால், சிவசந்திரனின் தங்கை ஜெயசித்ராவிடம் ஆறுதல் கூறிவிட்டு, சிவசந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடிகர் விவேக் கூறுகையில், இந்தியா எப்போதுமே அகிம்சை வழியையே விரும்பும்.
அதனால்தான், உலக நாடுகள் பலவும் இந்தியாவுடன் நட்புறவு வைத்துள்ளன. இந்நிலையில், நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் வரும்போது, பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
அதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கும் என்றார் அவர்.