நடுவலூர், கீழப்பழுவூரில் இன்று மின்தடை
By DIN | Published On : 28th February 2019 11:10 AM | Last Updated : 28th February 2019 11:10 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், நடுவலூர், கீழப்பழுவூர் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நடுவலூர், சுத்தமல்லி,பருக்கல், காக்காபாளையம், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உல்லியக்குடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை, மூர்த்தியான், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, சில்லக்குடி மேத்தால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.