சுடச்சுட

  

  திருவள்ளுவர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் ஜனவரி 16 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி  வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் திருவள்ளுவர் தினமான ஜன.16 அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே இந்த நாளில், டாஸ்மாக் மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai