சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட முடிவு

  By DIN  |   Published on : 12th January 2019 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரின் வெற்றிக்குத் தீவிரமாகப் பாடுபடுவது என அக்கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளது.
  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார்.
  மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ்,  புதுச்சேரி மாநில அமைப்பாளர் தனராஜ், மாநிலத் துணைப் பொதுச்செயலர் வைத்தி,  மாநில உழவர் பேரியக்கத்  துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சின்னதுரை உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து  கொண்டனர்.  கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும்  அன்புமணி ராமதாஸ் நிறுத்தும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய  வேண்டும். அதற்கு கட்சி பொருப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தின் முடிவில், மாவட்டப் பொதுச் செயலராக ஜெ.பி.ஆர். ரவி தேர்வு செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai