அரியலூர் நீதிமன்றத்தில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.சுமதி  தலைமை வகித்து,  புதுப்பானையில் பச்சரிசியிட்டு  பொங்கல் வைத்தார். பின்னர் பொங்கல் படையலிட்டு, சூரியபகவானை வணங்குதல் நடைபெற்றது. இதன் பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலட்சுமி உள்ளிட்ட நீதிபதிகள், அரசு சிறப்பு வழக்குரைஞர் சாந்தி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஜயங்கொண்டத்தில் :  ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், ஏ.ஆர்.டி. கூட்டுச் சிகிச்சை மையம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற தலைமை மருத்துவ அலுவலர் உஷாசெந்தில்குமார்,மருத்துவமனைக்கு வந்திருந்த அனைத்து நோயாளிகளுக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com