சுடச்சுட

  


  அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழகொளத்தூர்,திருமழபாடி,விளாகம் ஆகிய கிராமங்களில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி,வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 வாக்காளர்களை நேரில் சந்தித்து, அரசின் நலத் திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார் அவர். அக்கட்சியின் ஒன்றியச் செயலர் குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அன்பழகன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai