சுடச்சுட

  


  அரியலூர் அரசு கலைக் கல்லூரியில்,மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், திருச்சி பாரதிதாசன் பால்கலைக்கழகம் இணைந்து இளைஞர்களுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
  நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பெ. பழனிச்சாமி தலைமை வகித்து போட்டியில் கலந்து கொள்ள வந்த இளைஞர்களுக்கு பதிவு விண்ணப்பங்களை வழங்கினார்.
  நிகழ்ச்சியில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வறுமை, தேசிய ஒருமைப்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இயற்பியல் இணைப் பேராசிரியர் ம. ராசமூர்த்தி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் இளைஞர் நாடாளுமன்ற அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான வெ. கருணாகரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு தகுதியுள்ள இளைஞர்களைத் தெரிவு செய்தனர். தெரிவு செய்யப்பட்டோர் 26.1.2019 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai