சுடச்சுட

  


  தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது பொங்கல். உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் இத்திருநாளில் இனிக்கும் கரும்புக்கும், மங்களம் தரும் மஞ்சளுக்கும் தனி இடம் உண்டு.
  மங்கள பொருளாக விளங்கும் மஞ்சள் கிழங்கு, பொங்கல் பானையை அலங்கரிக்கவும், பூஜையில் வைத்து வழிபடவும் பயன்படுத்துகின்றனர்.
  இதற்காக மஞ்சள் கொத்துகள் சந்தைகளுக்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த பண்டிகையைக் குறிவைத்து கரும்பு, மஞ்சள் பயிர் செய்த விவசாயிகள் அறுவடைக்கு தயார்படுத்தி வருகிறார்கள்.
  அரியலூர் மாவட்டம், செந்துறை, இலங்கைச் சேரி,பெரம்பலூர் மாவட்டம் குன்னம் உள்ளிட்ட பகுதியில் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி மஞ்சள் சாகுபடி செய்யப்படும். அதன்படி கடந்த 10 மாதத்துக்கு முன்பே விவசாயிகள் தங்களது நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்தனர். சுமார் 1,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிர் தற்போது நன்கு செழித்து வளர்ந்து அறுவடை செய்யப்பட இருக்கிறது.
  இந்தப் பகுதியில் அறுவடை செய்யப்படும் மஞ்சள்,பெரம்பலூர்,அரியலூர்,விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருக்கிறது.
  இதுகுறித்து விவசாயி தியாகராஜன் கூறுகையில், முன்பெல்லாம் பொங்கல் பண்டிகைக்கு 2 நாள்களுக்கு முன் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து கிராமம் கிராமமாக சென்று நேரடியாக விற்று வந்தோம். தற்போது செந்துறையில் உள்ள கடைகளில் விற்கிறோம். ஒவ்வொரு மஞ்சள் கொத்திலும் 200 கிராம் முதல் 400 கிராம் வரை மஞ்சள் இருப்பதால் ஒரு கொத்து மஞ்சள் ரூ. 8 முதல் 10 ரூபாய் வரை மொத்தமாக விற்பனை செய்கிறோம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai