அம்மா திட்டம் முகாம் நடைபெறும் கிராமங்கள்

அரியலூர் மாவட்டத்தில் ஜன.18 ஆம் தேதி அம்மா திட்டம் முகாம் நடைபெறும் கிராமங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் ஜன.18 ஆம் தேதி அம்மா திட்டம் முகாம் நடைபெறும் கிராமங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி 
திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் அம்மா திட்டம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வட்டாட்சியர் முதலான வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமில் நேரடியாகப் பங்கேற்று, பொதுமக்களின் மனுக்களுக்குத் தீர்வு காணவும் முகாமில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அரியலூர் வட்டம் தேளூர்,விழுப்பணங்குறிச்சி,உடையார்பாளையம் வட்டம் வங்குடி,த.சோழன்குறிச்சி(தெ),கிராமங்களில் ஜன.18-இல் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.,வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத்  திட்டங்கள்,இலவச  வீட்டுமனைப் பட்டாக்கள்,பிறப்பு,இறப்பு சான்றிதழ்,சாதி சான்றிதழ் ஆகியவை  கோரி விண்ணப்பித்த மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்படும்.  எனவே சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com