நடைமுறைக்கு வந்த ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை ஆட்சியர் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை நடைமுறைபடுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியது: இத்திட்டத்தினை  நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரியலூர் மாவட்ட கருவூல அலகில் சுமார் 11,000 அரசு பணியாளர்கள் மற்றும்  6,000 ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள். 
சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை  இணையம் வாயிலாக எவ்வித கால நிபந்தனையுமின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க இயலும். 
சம்பளம் பெற்று  வழங்கும் அலுவலர்கள் இணையம் வழியாகப் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து அரசு  ஊழியர்கள் மற்றும் பயனாளியின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவு  மறைவின்றி வெளிப்படையாக எளிதாக அறிந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. நினைவூட்டுத் தகவல்களின்  வாயிலாக ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றிற்கான பணப்பலன்களை பணியாளர்கள் உரிய  நேரத்தில் பெற இயலும். அனைத்து பணியாளர்களும் அவரவர் பணிப் பதிவேட்டினை கணினி மற்றும் செல்பேசி செயலியிலும்  தங்களது கடவுச் சொற்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், கருவூல அலுவலர் அ.ச.இளங்கோவன்  உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com