காவல் துறையினருக்கு புத்தாக்கப் பயிற்சி
By DIN | Published On : 28th January 2019 03:35 AM | Last Updated : 28th January 2019 03:35 AM | அ+அ அ- |

அரியலூர் ஆயுதப்படை சிறப்பு பயிற்சி மையத்தில் காவல் துறையின் 8 ஆவது குழுவிற்கான புத்தாக்கப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு பேசியது: தமிழகத்தில் வேறு எந்தத் துறைக்கும் இல்லாமல் காவல் துறைக்கு மட்டுமே இந்த புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.10 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட காவல் துறையினர் மன அழுத்தத்தைக் குறைத்து பணியில் சிறப்பாக செயல்படுவதோடு தங்களது குடும்ப நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர். பின்னர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். கூடுதல் துணை கண்காணிப்பாளர் பெரியய்யா தெரிவித்தார்.