சுடச்சுட

  

  தா.பழூர் அருகே ஆரேரி ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

  By DIN  |   Published on : 02nd July 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே ஆரேரி பெரிய ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடியிடம், சமூக ஆர்வலர் ராஜமோகன் கோரிக்கை மனுவை அளித்தார்.
  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 432 கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி,துணை ஆட்சியர் நா.உமாமகேஸ்வரி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
  கூட்டத்தில் சமூக ஆர்வலரும், கோடாலி தெற்கு தெருவைச் சேர்ந்தவருமான கோ.பூ.ராஜமோகன் அளித்த மனுவில், தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு கோடாலி உள்ள ஆரேரி பெரிய ஏரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில் அந்த ஏரியின் ஒரு பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழையூர் பாப்பான் ஏரி பாசன விவசாயிகள் அளித்த மனு: மேலப்பழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தில் 120 ஏக்கர் கொண்ட பாப்பான் ஏரி மூலம் 1,000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  தற்போது நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு மண் எடுக்கப்பட்டு ஏரி ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஏரிக்கு நீர் வரும் பாதையில் ஆக்கிமிப்புகள் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு வரத்து வாய்க்காலையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai