சுடச்சுட

  


  அரியலூர் மான்ட்போர்ட் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
  மான்ட்போர்ட் பள்ளி மைதானத்தில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது. போட்டியில், அரியலூர்,திருச்சி,திண்டுக்கல்,மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. 
  இதில் இறுதிப் போட்டியில் 4:1 கோல் கணக்கில் அரியலூர் மான்ட்போர்ட் பள்ளி அணியை வீழ்த்தி, திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை அரியலூர் மான்ட்போர்ட் பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விடுதி அணியும், நான்காம் இடத்தை மதுரை திருநகர் இந்திராகாந்தி நினைவு பள்ளி அணியும் பெற்றன. 
  வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி முதல்வர் அந்தோனிசாமிசெழியன் தலைமை வகித்தார். ஆர்டிசி குழும நிறுவனத்தின் சேர்மன் அக்பர் ஷெரிப், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்  நல அலுவலர் ஜெயக்குமார்ராஜா ஆகியோர் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். போட்டியின் நடுவர்களாக ஜார்ஜ் ஜான், பாபு, கோபி, செந்தில்குமார் ஆகியோர் பணியாற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai