தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் நடைபெற்று வருகிறது.


அரியலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் நடைபெற்று வருகிறது.
இதில் வியாழக்கிழமை நடைபெற்ற வழிக்காட்டுதல் நிகழ்ச்சிக்கு அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர்(பொ) பெ.ஜெயக்குமார் தலைமை வகித்து, திறன் பயிற்சியின் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைத்தார். 
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.எகசானலி, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் பேசினர். மாவட்ட வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் வினோத் குமார், மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்துப் பேசினார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி கண்காணிப்பாளர் ஜி.சாந்தி, சுயதொழிலின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் செ.அண்ணாதுரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினர். முன்னதாக அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், நாட்டுநலப்பணி திட்ட அலுவலருமான ஏ.கருணாகரன் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com