வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 18th July 2019 04:41 AM | Last Updated : 18th July 2019 04:41 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில், பொய்யூர் கிராமத்தில் கல்லார் ஓடையில் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைப்பு, கரைகள் பலப்படுத்தும் மற்றும் தூர் வாரும் பணி, அயன்ஆத்தூர் விளாங்குடி ஓடையில் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைப்பு, கரைகள் பலப்படுத்தல் மற்றும் தூர் வாரும் பணி, காத்தாங்குடிகாடு கிராமத்தில் விளாங்குடி ஓடையின் குறுக்கே ரு.1கோடியே 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி, சித்தமல்லி கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் நீர் ஓடை சீரமைக்கும் பணி, குருவாலப்பர் கோவில் கிராமத்தில் பொன்னேரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் வை.வேல்முருகன், சாந்தி உள்பட பலரும் உடனிருந்தனர்.