Enable Javscript for better performance
காவலர்களுக்குப் பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து 55 பவுன் நகைளை மீட்ட காவலர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா ஆண்டிமடம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    விழாவில் கலந்து கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்,ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்டோரைப் பாராட்டி பரிசுகளை வழங்கி பேசுகையில் இப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
    அதற்கு விழாவில் கலந்து கொண்ட ஆண்டிமடம் வர்த்தக சங்கத்தினர் தங்களது சார்பில் 10 கேமராக்களும்,  திமுக சார்பில் 9 கேமராக்களும், ஒன்றிய அதிமுக சார்பில் 4 கேமராக்களும்,பாமக சார்பில் 4 கேமராக்களும்,லயன் சங்கம் சார்பில் 2 கேமராக்களும் தருவதாக ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடக்காதவாறு போலீஸாருக்கு துணையாக இருப்பதாக அனைவரும் உறுதியேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai