Enable Javscript for better performance
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் தேவை- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    அரியலூர் மாவட்டம், திருமானூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றியக் குழு சிறப்பு பேரவைக் கூட்டத்தில்  நிலத்தடி நீர்மட்டம் மேம்பட, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    100- நாள் வேலைத் திட்டத்தை திருமானூர் ஒன்றியம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை, உரிய விசாரணை செய்து தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் பல கிராமங்களில் உள்ள குடிநீர் தட்டுபாட்டை ஒன்றிய நிர்வாகம் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
    கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சின்னதுரை கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் மக்களுக்கான போராட்டங்கள் குறித்து பேசினார். ஒன்றியச் செயலர் புனிதன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மணியன், சாமிதுரை, மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன், மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai