Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,ரோந்து பணியில் ஈடுபடவுள்ள மாணவ,மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
    மாவட்ட காவல் துறை, பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி,மான்போர்ட் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 50 பேருக்கு முதற்கட்டமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ஆயுதப் படை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணவாளன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவரும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும். பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட்டு பெல்ட்,கேப்,பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai