Enable Javscript for better performance
பள்ளி,கல்லூரி அருகே புகையிலை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி,கல்லூரி அருகே புகையிலை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர்அலுவலகம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்த செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அருகில் 100 மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு நபரும் சிகரெட் மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்களை விற்கவோ,விற்பனைக்கு வைத்திருக்கவோ அல்லது விற்பனைக்கு அனுமதிக்கவோ கூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்கக் கூடாது. 
    அப்படி மீறி விற்றால் புகையிலை பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதோடு விற்போர் மற்றும் கடை
     உரிமையாளர்கள் மீதும், அதை அனுமதிக்கும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai