Enable Javscript for better performance
பொன்பரப்பியில் மடிக்கணினி கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்பரப்பியில் மடிக்கணினி கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பியில் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவர்கள் புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வழங்காத நிலையில், நிகழாண்டு மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதையறிந்த முன்னாள் மாணவர்கள் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வைக்கப்பட்டுள்ள அறைக்கு புதன்கிழமை மற்றொரு பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு, எங்களுக்கு முதலில் மடிக்கணினி வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக அவர்களின் பெற்றோரும் பள்ளி வளாகத்தில் கூடினர்.
    இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு, தலைமையாசிரியர் செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார். 
    அப்போது, இதுகுறித்து திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்ததையடுத்து முன்னாள் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai