Enable Javscript for better performance
வருவாய் மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி. துணைக் குழு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் துணைக் குழு கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரியலூர் நா.க. செல்வராஜ், செந்துறை மணிமொழி,உடையார்பாளையம் ந. மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கூட்டத்தில், ஆகஸ்ட் 2 இல் முதல் பருவ கவுன்சிலர்கள் கூட்டம், ஆகஸ்ட் 3 ஆவது வாரம் இறுதியில் ஜூனியர்கள் மூன்று  நாள் பயிற்சி முகாம், ஆகஸ்ட் 4 ஆவது வாரம் ஜெனிவா தின போட்டிகள், காலாண்டுத் தேர்வு முடிந்த  அடுத்தநாள் கல்வி சுற்றுலா, அக். 2 இல் காந்தி ஜெயந்தி, ஜெனிவா தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்.
    நவம்பர் 4 ஆவது வாரம் இரண்டாம் பருவ கவுன்சிலர் கூட்டம், சிறந்த ஜூனியர்களுக்கான  வாய்வழி மற்றும் எழுத்துத் தேர்வு, மாத நாட்காட்டி வழங்குதல். டிசம்பர் 1 எய்ட்ஸ் தின பேரணி, ஜனவரி 3 ஆவது  வாரம் வெள்ளிக்கிழமை 3 ஆம் பருவ கவுன்சிலர்கள் கூட்டம் ,விருதுகள், கிரேடு முறை சான்றிதழ் வழங்குதல்,  ஜனவரி 4 ஆவது வாரம் கவுன்சிலர்கள் சுற்றுலா, மே 8 உலக ரெட்கிராஸ் தினம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கன்வீனர்கள் சி. சிவசங்கர், இ.செ. சக்திவேல், டி. சாமிநாதன் மற்றும் பொருளாளர்கள், இணை கன்வீனர்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் மேல்நிலை நேர்முக உதவியாளர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் செயலர் நா. கலையரசன் செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai