முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரசுப் பேருந்து வழித்தடத்தை நீட்டிக்கக்கோரி விசிக மனு
By DIN | Published On : 30th July 2019 09:42 AM | Last Updated : 30th July 2019 09:42 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் இருந்து சில்லக்குடி வரை வந்து செல்லும் நகரப் பேருந்தை கோக்குடி வரை நீட்டிக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம் வரத்து வாய்க்கால்களை மழைக் காலத்துக்குள் தூர்வார வேண்டும். அரியலூரிலிருந்து வாரணவாசி, மல்லூர் வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும். பெரம்பலூரில் இருந்து சில்லக்குடி வரை வந்து செல்லும் அரசுப் பேருந்தை கோக்குடி வரை இயக்க வேண்டும். சாத்தமங்கலம் ஆதிதிராவிடர் காலனியில் சாலை வசதி, மின் வசதி மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருமானூர் காந்தி நகரில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலர் (மேற்கு) கண்ணன் தலைமை வகித்தார். திருமானூர் நகரச் செயலர் ஜெய்கணேஷ், ஒன்றியச் செயலர் (கிழக்கு) கண்ணன், நகரப் பொருளாளர் தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.