முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அஸ்தினாபுரத்தில் மாரியம்மன் வீதியுலா
By DIN | Published On : 30th July 2019 09:40 AM | Last Updated : 30th July 2019 09:40 AM | அ+அ அ- |

அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
அஸ்தினாபுரம் கிராமத்தில் கடந்த 26 ஆம் தேதி பால்குடத் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியம்மன், காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். வீதியுலாவின் போது பொதுமக்கள் தங்களது தாம்பூழத்தில் மா விளக்கு, வாழைப்பழம், தேங்காய் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.