முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
By DIN | Published On : 30th July 2019 09:42 AM | Last Updated : 30th July 2019 09:42 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் தா.பழூர் பகுதியில் மதுபானம் விற்ற பெண் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகவல்லி தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு நத்தவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சகுந்தலா (45) என்பவர் தனது வீட்டின் பின்புறப் பகுதியில் மதுபானத்தைப் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.
இதேபோல் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த தா.பழூர் அருகேயுள்ள தேவமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சநாதன(70) என்பவரைத் தா.பழூர் போலீஸார் கைது செய்தனர்.