சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்களில் நிகழாண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் பயிற்சி செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாவட்ட அளவிலான பயிற்றுநர் தயாளன் பங்கேற்று, கிராமப்புற வளர்ச்சியில் பல்வேறு துறைகளின் பங்கு, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை நிலைத்த  வளர்ச்சிக்கான இலக்குகளின் அடிப்படையில் தயாரித்தல், ஊராக வளர்ச்சி அமைப்புகள், கிராம ஊராட்சி வளர்ச்சித்  திட்டம் தயாரிக்கும் முறை, கூட்டமைப்புகளின் பங்கு, திட்டம் தயாரிப்பதில் சுய உதவி குழுக்களின் பங்கு, கிராம  வளர்ச்சித் திட்டப் படிவம் ஆகியவை குறித்து பயிற்சியளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai