குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின மனிதச்சங்கிலி, உறுதியேற்பு

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்டக்

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மனித சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய்க் கோட்டாட்சியர் நா. சத்தியநாராயணன் தலைமை வகித்து பேசியது:
அரியலூர் மாவட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, கடைகளிலோ, கல்குவாரிகளிலோ, செங்கல் சூலைகளிலோ வேலைக்கு அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டணை வழங்கப்படும்.
மேலும், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்றிட ஏற்பாடு செய்வது அனைவரின் கடமையாகும் என்றார். நிகழ்ச்சியில் அரியலூரில் உள்ள பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி, தொழிலாளர் துறை ஆய்வாளர் ஆர். குருநாதன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆட்சியரகத்தில்...  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தா.பரிதாபானு தலைமையில், அனைத்து அரசு அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதியேற்றனர்.
செந்துறையில்.... வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் குணசேகரன் தலைமையில் பயிற்றுநர்கள், பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.
பெரம்பலூரில்... உலக குழந்தைத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க  வலியுறுத்தும் வகையில், கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், உதவி ஆணையர் சேதுராமன், தனித்துணை ஆட்சியர் மனோகரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது யூசுப், ஆதிதிராவிடர் நல அலுவலர் பி. மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com