இளம்பெண் மாயம்: தந்தை போலீஸில் புகார்
By DIN | Published on : 14th June 2019 09:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆண்டிடம் அருகேயுள்ள காங்குழி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் சுகந்தி(22). பட்டதாரி. இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வயலுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது தந்தை ராமமூர்த்தி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.