கூத்தூர் பகுதியில் நாளை மின் தடை
By DIN | Published On : 23rd June 2019 04:23 AM | Last Updated : 23rd June 2019 04:23 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (ஜூன் 24) நடைபெறுகிறது.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன் நகரம், அல்லி நகரம், மேல மாத்தூர், வெண்மணி, காடூர், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம், குழுமூர் மற்றும் கிளியப்பட்டு ஆகிய ஊர்களில் திங்கள்கிழமை காலை 9.45 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் எம்.செல்லப்பாங்கி தெரிவித்துள்ளார்.