முப்படைகளில் அலுவலர் பணி: முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th June 2019 08:32 AM | Last Updated : 24th June 2019 08:32 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த முப்படைகளில் அலுவலர் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு 08.09.2019 அன்று நடைபெறுகிறது.
http://upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் 08.07.2019-க்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்கத்தில் முன்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி பெற விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பித்த இணையதள விண்ணப்பத்துடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.