சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
           திருமானூர் அருகேயுள்ள மேலப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் பிச்சை மகன் குமார் (42). இவர், திங்கள்கிழமை இரவு, தனது மனைவி ஜெயந்தியுடன் இரு சக்கர வாகனத்தில் டால்மியா சாலையில் சென்றுள்ளார். பூண்டி பிரிவுச் சாலை அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றார். அப்போது, எதிரே வந்த வாகனத்தால் இருவரும் நிலைத்தடுமாறி எதிரெதிர் புறத்தில் கீழே விழுந்தனர். இதில், பின்னால் வந்த டிராக்டர் குமாரின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    காயமடைந்த ஜெயந்தி கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டர் ஓட்டுநர்  பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் ராஜ் (29) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai