சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
    திருமானூர் அருகேயுள்ள அருங்கால் கிராமம், சத்யா நகரைச் சேர்ந்தவர் குமார் மகன் சரவணன் (27), மீன் வியாபாரி. இவர் ஞாயிற்றுக்கிழமை  காலை திருமானூரில் இருந்து கீழப்பழுவூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தமங்கலம் துணை மின் நிலையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    பின்னர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து  கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai