மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 08:42 AM | Last Updated : 02nd March 2019 08:42 AM | அ+அ அ- |

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தை நாளை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பள்ளியில் திமுக சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு மற்றும் பேனா,பென்சில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்து மேற்கண்டபொருள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். நகரச் செயலர் ரா. முருகேசன், ஒன்றியப் பொறுப்பாளர் கோ. அறிவழகன், பொதுக் குழு உறுப்பினர் ரா. பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் ஜயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, ஆண்டிமடம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் கட்சி கொட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.