சுடச்சுட

  

  கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 16th March 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டிக்கு குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  ஜயங்கொண்டம் அருகிலுள்ள உதயநத்தம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மதியழகன் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் தனவேல்,ஆலோசகர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
  விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், மீன்சுருட்டி செயலர் ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பஞ்சாபிகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
  இரவு நேரங்களில் லாரிக்கு மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவது கண்டனத்துக்குரியது. அரியலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிக்கான குவாரி அமைக்க வேண்டும். 
  அவ்வாறு அமைக்காதபட்சத்தில் மார்ச் 25 ஆம் தேதி மணல் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியுரிமை ஆவணங்களை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பது,தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக உதய நத்தம் ராஜேந்திரன் வரவேற்றார். இறுதியில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai