சுடச்சுட

    

    100 % வாக்குப்பதிவு: பள்ளி மாணவர்களுக்கு உறுதிமொழி கையெழுத்துப் படிவம்

    By DIN  |   Published on : 16th March 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு ஏற்படும் வகையில், மாவட்டத்திலுள்ள 780 பள்ளிகளில் பயிலும் 1.30லட்சம்  மாணவ,மாணவிகளின் பெற்றோர்களிடம் உறுதிமொழி கையெழுத்து படிவம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
    இப்படிவம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, அதில் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போம் என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு வாங்கி வருமாறு அறிவுறுத்தப்பட்டது. தாமரைக்குளம்  வித்யாமந்திர் பள்ளியில்நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன்,பள்ளி மாணவ,மாணவிகளிடம் உறுதி மொழி படிவத்தை வழங்கினார்.
    அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிச்சாமி, பள்ளி துணை முதல்வர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai