சுடச்சுட

  


  அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பேரவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு கல்லூரி முதல்வர் பெ. பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் சா. சிற்றரசு முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் கலந்து கொண்டு, சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். திருவாரூர் மத்திய பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் சா.சுபாஷ், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழ் இலக்கிய குறித்து பேசினார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவி ச. வேதவள்ளி வரவேற்றார். முதுகலை மாணவி விஜி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai