சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தொடர்பான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
  பயிற்சியை செந்துறை வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் தொடக்கி வைத்து, மாணவர்களின் சுய படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்வது, போட்டித் தேர்வுக்கு தயாராகத் தேவையான திறன்களை வெளிப்படுத்துவது, மனவரைப்படத்தின் வழி கற்றலை மேம்படுத்துவது,திட்டங்களை உருவாக்குவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
  ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சிதேவி, கலா மாலினி, செல்வகுமார், இளையராஜா, மதியழகன், சுப்பிரமணியன், ஆசிரியை கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர். 
  பயிற்சியில் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 165 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai