சுடச்சுட

  


  அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த நாகமங்கலம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அக்கிராம மக்கள்  ரூ.1.50 லட்சம் மதிப்பில் கல்விச் சீர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
  பள்ளிக்குத் தேவையான  பிரிண்டர், நாற்காலிகள், மின் விசிறிகள், எல்.இ.டி டிவி உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை மேள தாளத்துடன் சீர்வரிசையாகப் பள்ளிக்குக் கொண்டு நாகமங்கலம் கிராம மக்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அவைகளை வழங்கினர்.
  பின்னர் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியை விடிவெள்ளி தலைமை வகித்து, அரியலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், உமையால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
  இடைநிலை ஆசிரியர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai