தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

அரியலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.


அரியலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை செய்யப்பட்ட போதிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், அரியலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் அரியலூர் நகராட்சிகளுக்குட்பட்ட சின்னக்கடை தெரு, பெரியகடை தெரு, மார்க்கெட் தெரு மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டனர். 
ஆய்வில், ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள், பாலித்தீன் பைகளை கைப்பற்றி அழித்தனர். நகாரட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும். 
மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com