அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 03:16 AM | Last Updated : 24th March 2019 03:16 AM | அ+அ அ- |

அரியலூரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அரியலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் அரியலூர் நகராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன கடைத்தெரு, பெரிய கடைத்தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனர் .
ஆய்வின்போது, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள், பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 5 கடைகளுக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும் என்றும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.