Enable Javscript for better performance
அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொ. சந்திரசேகர் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
    வாக்கு சேகரிப்பின்போது, அவர் நான் வெற்றிபெற்றால் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். நவீன அரிசி ஆலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
    வாரணவாசி, கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி கேட், பூண்டி, மலத்தான்குளம், வெங்கனூர், விளாகம், இலந்தைக்கூடம், மஞ்சமேடு, திருமானூர், சாத்தமங்கலம் வெற்றியூர், கள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருடன் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயவேல் மற்றும் பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai